ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலை அடுத்து ரஷ்யாவுடனான தூதரக ரீதியிலான உறவை உக்ரைன் துண்டித்துள்ளது. ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட உக்ரைன் நாட்டு ராணுவ வீரர்கள் இறந்துள்ளதாகவும், தாங்கள் நடத்திய பதில் தாக்குதலில் ரஷ்யாவை சேர்ந்த ஆக்கிரமிப்பாளர்கள் 50 பேர் கொல்லப்பட்டதாகவும் உக்ரைன் அறிவித்துள்ளது.
இந்த பதற்றமான சூழலில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க டெல்லியில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 1800118797 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உதவி கோரலாம் என இந்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. +91 11 23012113, +91 11 230141104, +91 11 23017905 ஆகிய எண்களையும் தொடர்பு கொள்ளலாம். situationroom@mea.gov.in என்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளாலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல் உக்ரைனிலிருந்து இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொள்ள +380 99300428, +380 997300483,+38 0933980327, +38 0635917881 ,+38 0935046170 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை எப்பொழுதும் தயராக வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான இந்த போர் பதற்றம் காரணமாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவைக் கண்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 109 காசுகள் குறைந்து ரூபாய் 75.70 ஆக சரிவைக் கண்டுள்ளது.