650 உறுப்பினர்களைக் கொண்ட இங்கிலாந்தின் நாடாளுமன்ற தேர்ந்தல் நேற்று நடந்தது. உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் வெற்றிக் கணக்கை கன்சர்வேட்டிவ் கட்சி முதலில் தொடங்கியது. பெரும்பான்மைக்கு 326 இடங்கள் தேவை என்ற நிலையில் அந்தக் கட்சி 364 இடங்களை கைப்பற்றி வெற்றியடைந்துள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சியை எதிர்த்து போட்டியிட்ட தொழிலாளர் கட்சி 203 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. அந்தக் கட்சியின் தலைவரான போரிஸ் ஜான்சன் தான் போட்டியிட்ட தொகுதியில் வென்றுள்ளார்.
பிரிட்டன் தேர்தலில், கன்சர்வேடிவ் கட்சி மற்றும் லேபர் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 10- க்கும் மேற்பட்டோர் வெற்றியை பதிவு செய்துள்ளனர். உள்துறை அமைச்சராக இருந்த பிரீத்தி பட்டேல், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் வெற்றிபெற்றுள்ளார். கருவூல தலைமைச் செயலராக இருந்த இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக் வெற்றி பெற்றுள்ளார். சர்வதேச மேம்பாட்டுத்துறையின் அமைச்சராக இருந்த அலோக் சர்மா வெற்றி பெற்றுள்ளார். சைலேஸ்வரா, சுயெல்லா பிரேவர்மன், பிரீத்தி கவுர் கில், தன்மன்ஜித் சிங் தேசி, வீரேந்திர சர்மா, லிசா நந்தி, சீமா மல்ஹோத்ரா, வலேரி வாஸ் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர். ஆளும் கன்சர்வேடிவ் கட்சி சார்பில், ககன் மொஹிந்திரா, கிளேர் கொட்டின்ஹோ, லேபர் கட்சி சார்பில் நவேந்தரு மிஸ்ரா ஆகிய புதுமுகங்களும் வெற்றி பெற்றுள்ளனர்.