உலகமெங்கும் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அண்மையில் இஸ்ரேலில் ஃப்ளூ மற்றும் கரோனா வைரஸ் இணைந்த ஃப்ளூரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், தற்போது அமெரிக்காவிலும் ஃப்ளூரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கலிபோர்னியா மற்றும் டெக்சாஸ் மாகாணங்களை சேர்ந்த இரு குழந்தைகளுக்கு இந்த ஃப்ளூரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஃப்ளூ மற்றும் கரோனாவை கண்டறிய தனி தனி சோதனைகள் தேவைப்பட்டதாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஃப்ளூரோனா பாதிப்பின் அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.
அதேநேரத்தில் டெக்சாஸ் மாகாணத்தில் ஃப்ளூரோனா பாதிக்கப்பட்ட குழந்தை வீட்டிலேயே குணமடைந்து வருவதாக அமெரிக்க ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் அண்மையில் தினசரி கரோனா பாதிப்பு 10 லட்சத்தை தாண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.