பிரேசில் நாட்டில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் தற்போது ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையிலுள்ள முன்னாள் அதிபர் லுலா போட்டியிடப்போவதாக கூறினார். ஆனால், அவர் தண்டிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து அந்த நாட்டின் நீதிமன்றம் தடை செய்துவிட்டது. மீண்டும் லுலா மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், லுலா போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“அக்டோபர் 7-ந் தேதி நடக்க உள்ள அதிபர் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. பெர்னாண்டோ ஹத்தாத் எனது பிரதிநிதியாக தேர்தல் களத்தில் இருப்பார். நமது வேட்பாளர் பெர்னாண்டோ ஹத்தாத்” என கூறி உள்ளார். தற்போது இவர் விலகியிருப்பதால் பிரேசில் தேர்தல் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.