Skip to main content

"சிசிடிவி கேமரா பாதுகாப்பு... காணாமல் போகும் பிணங்கள்" - காரணம் இதுதான்!

Published on 22/01/2020 | Edited on 22/01/2020

சீனாவில் பெண் சடலங்கள் திருடு போகும் சம்பவம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சீனாவில் திருமணம் ஆகாமல் ஒருவர் இறந்துவிட்டால் அவருடன் பெண் சடலம் ஒன்றை புதைப்பதை பழங்கால மரபாக வைத்திருக்கிறார்கள். இதன்படி திருமணம் முடிக்கும் முன்பு இளைஞர் ஒருவர் இறந்தால், அதே தினத்தில் இறந்த பெண்ணின் உடலை பெற்று அந்த இளைஞருக்கு அருகில் புதைத்து விடுவார்கள். இது வழக்கமான நடைமுறையாகும். இல்லை என்றால் பெண் பொம்மையையோ அல்லது பெண் உருவம் வரையப்பட்ட புகைப்படத்தையோ ஆணின் சடலத்துடன் புதைத்து விடுவார்கள். 



தற்போது கிராமப்புறங்களில் உள்ளவர்களும் வசதியானவர்களாக மாறிவிட்டதால் அவர்கள் உண்மையான சடலத்துடனே தங்கள் குடும்ப உறுப்பினரை புதைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதனால் அவர்களின் விரும்பத்தை நிறைவேற்ற புதிதாக ஏஜெண்டுகள் தோன்றியுள்ளனர். இவர்கள் முடிந்தால் பெண் பிணத்தை தேடி தருவார்கள். இல்லையென்றால் ஏற்கனவே இறந்த பெண்ணின் உடலை கொண்டுவந்து கொடுக்கிறார்கள். இதனால் கடந்த ஆண்டு மட்டும் 50 பிணங்களை காணவில்லை என்று காவல் நிலையத்தில் அவர்களின் உறவினர்கள் புகார் கொடுத்துள்ளனர். இதனால் பெரும்பாலான சுடுகாடுகளில் சிசிடிவி பாதுகாப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தன்னுடைய தாயின் சடலத்தை காணவில்லை என்று இளைஞர் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார்.

 

சார்ந்த செய்திகள்