சிலந்தி வலை கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன சிலந்திவலைக் கூடாரம்? அமேஸான் காடுகளில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் அலைந்து திரிந்து இந்த மிகச்சிறிய வெண்பட்டு வலைக் கூடாரத்தை கண்டுபிடித்திருக்கிறார் புகழ்பெற்ற வனவியல் நிபுணர் டொரெஸ் பில்.
சமீபத்தில் இவர் பெரு நாட்டுக்கு சென்றார். அங்கு பரவியுள்ள அமேஸான் காடுகளுக்குள் இவர் ஆய்வு நடத்தினார். அப்போது, ஒரு இலையில் இந்த மிகச்சிறிய வலைக்கூடாரம் இருப்பதை கண்டுபிடித்தார்.
பிரிட்டனில் ஆதி மனிதர்கள் மிகப்பெரிய கற்களால் கட்டிய கல்மேடைக்கு நிகராக இதை பட்டுக்கூடாரம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். வட்டவடிவில் சிறிய பட்டு நூல் தூண்களையும், அவற்றை மெல்லி பட்டு இழைகளால் இணைத்து இது கட்டப்பட்டுள்ளது. வட்டவடிவ கட்டமைப்புக்குள் நடுவே உயரமான தூண் போன்ற அமைப்பை உருவாக்கி, அதன் உச்சியிலிருந்து தோரணங்கள் போல பட்டு இழைகளை பின்னப்பட்டுள்ளன.
இந்த வலையை பின்னிய சிலந்திப் பூச்சியை பார்க்க முடியவில்லை. என்றாலும், இது சிலந்திப் பூச்சியின் முட்டைகளைப் பாதுகாப்பதற்காக கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறார் டொரெஸ் பில்.