ஊழலில் ஈடுபட்ட சீன அதிகாரி ஒருவரின் வீட்டிலிருந்து பதிமூன்றரை டன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவை சேர்ந்த 58 வயதான ஷாங் குய் என்பவர் சீனாவின் அரசு அமைப்பில் உயர் பதவியில் இருந்தவர். தற்போது ஹைக்கு பகுதியில் வசித்து வரும் இவர் மீது ஊழல் குற்றசாட்டுகள் எழுந்த நிலையில், இவரது வீட்டை அதிகாரிகள் சோதனை செய்ததாக தெரிகிறது. அப்போது குவியல் குவியலாக தங்க பிஸ்கட்டுகள், நகைகள் மற்றும் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. 530 மில்லியன் பவுண்ட் மதிப்புடையதாக கருதப்படும் இந்த தங்கம் மட்டுமல்லாமல் 30 பில்லியன் பவுண்டு பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இதுபோன்ற மிகப்பெரிய தொகை கைப்பற்றப்பட்டிருப்பது இதுவே முதன்முறை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.