நான் வெற்றி பெற்றால் எல்லைப்பிரச்சனையில் இந்தியாவின் பக்கம் நிற்பேன் என ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
அமெரிக்கவாழ் இந்தியர்களோடு நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஜோ பைடன், "நான் வெற்றி பெற்றால் இந்தியாவின் எல்லைப் பிரச்சனையில் இந்தியாவின் பக்கம் நிற்பேன். இந்தியாவுடன் சிவில் ஒப்பந்தம் நிறைவேறியதில் எனது பங்கு பெரிதும் உண்டு. நம் இரு நாடுகள் நட்பு நாடுகளாக மாறினால் அது உலக பாதுகாப்பிற்கு பெரிதும் வழிவகுக்கும் என்று ஆலோசனை கூறினேன். இம்முறை நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் இதைத் தொடர விரும்புகிறேன். உள்நாட்டுப் பிரச்சனை, எல்லைப் பிரச்சனை, வர்த்தக மேம்பாடு என அனைத்திலும் இந்தியாவிற்கு பக்கபலமாக அமெரிக்கா இருக்கும். இது நம் இரு நாடுகளுக்கு இடையேயான நட்பை அதிகரித்து இரு நாட்டு மக்களிடமும் நல்லுறவை ஏற்படுத்த வழி செய்யும்" என்றார்.
வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கிறது. ஜோ பைடனை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ட்ரம்ப் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.