Skip to main content

பலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகள்... கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு குவியல்கள்...

Published on 29/08/2019 | Edited on 29/08/2019

பெரு நாட்டின் தலைநகரான லிமாவின் வடக்குக் கடற்கரை பகுதியில் உள்ள மிகப்பெரிய பலியிடும் பீடத்தின் அருகில் 227 குழந்தைகளின் எலும்பு கூடுகளை கண்டறிந்துள்ளனர்.  

 

sacrifised children skeleton found in peru

 

 

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த கடற்கரைக்கு அருகில் உள்ள பம்பா-லா-க்ரூஸ் நகரத்தின் சுற்றுப் பகுதிகளில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது 56 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விளைவாக கடந்த ஆண்டில் பம்பா-லா-க்ரூஸில் பலியிடப்பட்ட 140 குழந்தைகள் மற்றும் 200 ஒட்டகங்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அந்த கடற்கரை பகுதியில் கண்டறியப்பட்ட பலிபீடத்தில் 227 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுகுறித்து தலைமை தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஃபெரன் காஸ்டிலோ கூறுகையில், "பலியிடப்பட்ட குழந்தைகளின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய தளம் இது. கடவுள்களை கவுரவிக்கவும், ’எல் நினோ’ நிகழ்வு நடக்காமல் இருக்க இயற்கையை சமாதானப்படுத்தவும் 4 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் பலியிடப்பட்டுள்ளனர்" என தெரிவித்தார்.

மேலும் கி.பி.1200-1475 ஆம் ஆண்டுவரை பெரு நாட்டில் நிலவி வந்த சிமு நாகரீகத்தில்தான் இந்த பலியிடல்கள் நடத்தப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

37 வயது காதலனை கடல் தாண்டி பார்க்கச் சென்ற 51 வயது பெண்; கடற்கரையில் சடலமாக மீட்பு

Published on 27/11/2022 | Edited on 27/11/2022

 

A 51-year-old woman who went overseas to marry her 37-year-old boyfriend; Rescue of a dead body on the beach

 

மெக்ஸிகோவை சேர்ந்தவர் ப்ளான்சா அரெல்லானா. 51 வயதான இவர் பெருவை சேர்ந்த 37 வயதான ஜான் பாப்லோவை ஆன்லைன் டேட்டிங் செயலியில் சந்தித்து காதல் வயப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் ஜூலை மாதத்தின் இறுதியில், பெரு நாட்டின் லிமா நகருக்குச் செல்ல இருப்பதாகத் தனது உறவினர்களுடன் கூறியுள்ளார். அங்கு தான் காதலித்து வந்த ஜான் பாப்லோவை சந்திக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.

 

3000 மைல்கள் பயணம் செய்து ஜான் பாப்லோ தங்கியிருந்த கடற்கரை நகரமான ஹுவாசோ சென்றுள்ளார். ப்ளான்சா தனது உறவினரிடம் கடைசியாகப் பேசிய தொலைப்பேசி அழைப்பில் கூட ஆன்லைன் மூலம் கிடைத்த உறவினால்தான் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறியுள்ளார்.  

 

நாட்கள் செல்ல செல்ல நவம்பர் 7ம் தேதிக்குப் பிறகு அவரிடமிருந்து அழைப்பு ஏதும் வராததால் ப்ளான்சாவிற்கு என்ன நடந்ததோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் ப்ளான்சா ட்விட்டரில் உதவி கேட்டது அவரது குடும்பத்தாரை அதிர்ச்சி கொள்ளச் செய்தது. ப்ளான்சாவை மீட்க அவரது உறவினர்கள் பல்வேறு வகையில் முயற்சி செய்தனர்.  

 

இது குறித்து தகவல் அறிந்து பெரு நாட்டு காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். நவம்பர் 10ம் தேதி அன்று ஹுவாசோ கடற்கரையில் பெண்ணின் துண்டிக்கப்பட்ட விரல் ஒன்று இருந்துள்ளது. விரலில் சில்வர் மோதிரமும் இருந்துள்ளது. 

 

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாளில் உடலில் உள்ளுறுப்புகள் எதுவுமின்றி உடல் அதே கடற்கரையில் இருந்துள்ளது. மேலும் இறந்தது ப்ளான்சா என்பதை அவரின் விரலிலிருந்த மோதிரத்தைக் கொண்டு கண்டுபிடித்துள்ளனர். 

 

தொடர்ந்து ஜான் பாப்லோ, உடலுறுப்புகள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். பாப்லோ மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர் என்று தெரிய வந்தது. ப்ளான்சா இறந்த இரண்டு நாள் கழித்து தனது டிக் டாக் பதிவில் மனித உறுப்புகளை வைத்து பதிவிட்டிருந்தார். மேலும் அவரது வீடு முழுக்க ரத்தத் துளிகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

 


 

Next Story

'கர்மா இஸ் பூமரங்': 2016-ல் செய்த குற்றம் - மூன்று நாட்களிலேயே பதவியை இழந்த பெரு பிரதமர்!

Published on 05/02/2022 | Edited on 05/02/2022

 

peru pm

 

பெரு நாட்டின் பிரதமராக பதவியேற்ற மூன்று நாட்களிலேயே வேலர் பின்டோ என்பவர், அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு வேலர் பின்டோ மீது அவரது மனைவியும், மகளும் தங்களை தாக்கியதாக புகார் அளித்திருந்ததை ஊடகம் ஒன்று கடந்த வியாழன்று அம்பலப்படுத்தியது.

 

இதன் காரணமாக அவரை பதவியிலிருந்து நீக்கக்கோரி கோரிக்கை எழுந்தது. சில அமைச்சரவை உறுப்பினர்களே வேலர் பின்டோவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனைத்தொடர்ந்து பதவியேற்ற மூன்றாவது நாளிலேயே வேலர் பின்டோவை பிரதமர் பதவியிலிருந்து பெரு அதிபர் பெட்ரோ காஸ்டிலோ நீக்கியுள்ளார்.

 

அதேநேரத்தில் வேலர் பின்டோ மனைவியையும், மகளையும் தாக்கியதாக தன்மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனவும், நாடாளுமன்றம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்றாத வரை பிரதமர் பதவியில் தொடருவேன் என அறிவித்துள்ளார்.