Mahinda family digs soil in Sri Lanka!

'ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை நிச்சயம் உண்டு' இது இப்போது இலங்கையின் அரசு குடும்பத்தை உணர செய்திருப்பதாக சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

இலங்கையில் கரோனாவால் பொருளாதாரம் முடங்கியது, அதைத் தொடர்ந்து, சிறிய அளவிலான போராட்டம், விஸ்வரூபம் எடுத்தது உலகறிந்த விசயம். ஜல்லிக்கட்டுக்கான மெரினா போராட்டங்கள் போல, சில மாதங்கள் அமைதியாக நடந்த நிலையில், தேன் கூட்டில் கை வைத்தது போல, மக்கள் மீது ராஜபக்சே குடும்ப ஆதரவாளர்கள், தாக்குதல் நடத்தியது வினை.

Advertisment

அதன் எதிர்வினை பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே இழக்கச் செய்தது. மக்களின் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல், ஊரடங்கு, அவசரநிலை பிரகடனம் என முயற்சித்துப் பார்க்கும் அதிபர் கோத்தபய இறுதியில் ராணுவத்தைக் களமிறங்கியது அடுத்த வினை. எதிர்காலத்தைத் தொலைத்து போராடுவோரை அடக்கும் ராணுவத்தின் முயற்சி வன்முறையில் முடிந்திருக்கிறது.

Mahinda family digs soil in Sri Lanka!

குடும்ப உறுப்பினர்கள் பலர் பதவி விலக, பிரதமராக தம்பியும் பக்கத்தில் இல்லாமல் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தத்தளிப்பது இதன் எதிர்வினை. கடந்த 2009- ஆம் ஆண்டு கொத்துக் குண்டுகளால் தமிழர்களை கொத்து கொத்தாகக் கொன்று புதைத்தபோது, ஆட்சியில் இருந்தவர்கள் இதே ராஜபக்சே குடும்பத்தினரே.

அப்போது, அவர்களது வினைக்கு பாலுக்கு ஏங்கிய பச்சிளங் குழந்தைகள் முதல் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகன் வரை இறையாகின. அது அன்று மகிந்த குடும்பத்தினர் செய்த வினை.

Mahinda family digs soil in Sri Lanka!

தமிழர்கள் மட்டுமல்ல சிங்கள மக்களே ராஜபக்சே குடும்பத்தினரைப் பதவியில் இருந்து விரட்ட தொடர் போராட்டத்தில் கை கோர்த்திருப்பது எதிர்வினை.