Skip to main content

இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடத் தடை..? குவியும் கண்டனங்கள்...

Published on 26/12/2019 | Edited on 26/12/2019

இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு தடைவிதிக்கப்பட உள்ளது என்ற செய்திக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.

 

srilankan tamil natioanal anthem controversy

 

 

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று கோத்தபய ராஜபக்சே அதிராக பதவியேற்றது முதல் அவரின் பல செயல்பாடுகள் இலங்கை தமிழர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், 04.02.2020 அன்று கொழும்புவில் நடைபெற உள்ள இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழ் மொழியில் இலங்கை தேசிய பாடப்பட்டது என இலங்கை அரசு வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மொழிகளில் தேசிய கீதம் பாடப்படுவது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு உகந்ததாக இருக்காது என தெரிவிக்கும் இலங்கை அரசு, அடுத்த மாதம் நடைபெற உள்ள சுதந்திர நிகழ்ச்சியில் தேசிய கீதம் சிங்களத்தில் மட்டும்   பாடு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ளது.

1949 ஆம் ஆண்டு இலங்கையின் முதல் சுதந்திர தின விழாவில் தமிழ் மொழி மற்றும் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டது. அதன்பின் இந்த நடைமுறை மாற்றப்பட்ட நிலையில், போரினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நல்லிணக்கத்துக்கு வழி செய்யும் வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தமிழிலும் தேசியகீதம் பாடப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது இந்த முறையை மாற்ற மீண்டும் இலங்கை அரசு முடிவு செய்துள்ளது பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களை பெற்று வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்