Skip to main content

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்... வாக்குப் பதிவு நிறைவு...

Published on 05/08/2020 | Edited on 05/08/2020

 

srilankan parliament election 2020

 

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. 

 

இலங்கை நாடாளுமன்றத்தில் பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைய இருந்த சூழலில், ஆட்சிக்காலம் முடிவதற்கு முன்பே அவையைக் கலைத்துத் தேர்தல் நடத்த இருப்பதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்தார். இதனையடுத்து இலங்கை நாடாளுமன்றம் கடந்த மார்ச் மாதம் கலைக்கப்பட்டுத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா பரவலால் இந்த தேர்தல் குறித்த திட்டங்கள் மாற்றப்பட்டு, தேர்தல் தள்ளிப்போடப்பட்டது. இந்நிலையில், கரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து, ஐந்து  மாதங்களுக்குப் பின்னர் அங்கு இன்று பொதுத் தேர்தல் நடைபெற்றது.

 

காலை ஏழு மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவில், மக்கள் வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல் உள்ளிட்டவற்றை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியிருந்த நிலையில், இந்த விதிகளைப் பின்பற்றி அங்கு வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. அதன்படி, மாலை 4 மணி நிலவரப்படி 55% வாக்குகள் பதிவாகி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஆகஸ்ட் 6ம் தேதி காலை 8 மணி முதலே வாக்கு எண்ணும் பணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்