Skip to main content

உலகை உலுக்கிய டிக்கரி யானை உயிரிழப்பு!

Published on 25/09/2019 | Edited on 25/09/2019

கடந்த சில மாதங்களுக்கு முன் எலும்பும் தோலுமாக இதுவரை யாரும் பார்த்திராத ஒரு தோற்றத்தில் ஒரு யானையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. 70 வயதான டிக்கிரி என்ற அந்த பெண் யானையின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்த சேவ் எலிபேண்ட் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளை யானைகளுக்கு நேரும் கஷ்டங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இதுதொடர்பான அவர்களுடைய பதிவில், "திருவிழா தொடங்கும் நேரத்தில் பேரணியில் இணையும் டிக்கிரி நள்ளிரவில்தான் மீண்டும் தன் இடத்திற்கு திரும்புகிறது. எலும்பும், தோலுமாக மிக மோசமான உடல்நிலையுடன் உள்ள டிக்கிரியை மக்களின் கூச்சல், பட்டாசு, புகை நடுவே ஊர்வலமாக அழைத்துச் செல்கின்றனர் " எனக் கூறப்பட்டிருந்தது. இதைப் பார்த்த பலரும் தங்களது வேதனையை வெளிப்படுத்தி இருந்தனர்.
 

ghj



இந்தக் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்திருந்த யானையின் உரிமையாளர் விழாவில் பங்கேற்பதற்காக யானையை அழைத்து வரவில்லை, வேண்டுதலை நிறைவேற்றத்தான் அழைத்து வந்தோம் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த டிக்கிரி யானைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி டிக்கிரி யானை உயிரிழந்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்