ஒரு படத்திற்கு டிரைலர் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. படத்தின் கதை என்னவாக இருக்கும், கரு என்னவாக இருக்கும் என்று பார்ப்பவரை தூண்டிவிடும். அப்படிப்பட்ட டிரைலர் குறைந்தது ஒன்றிலிருந்து மூன்று நிமிடங்களை வரை இருக்கும். ஆனால் சோனி நிறுவனமோ டிரைலர் என்று நினைத்து முழுநீள படத்தையே வெளியிட்டுள்ளது. டிரைலர் என்ன 90 நிமிடம் இருக்கிறது என்ற சந்தேகத்துடனும் மக்கள் அனைவரும் இதைப்பார்க்கத் தொடங்கினர் அவ்வாறு இது மிக பிரபலமானது.
கடந்த செவ்வாய்கிழமை அன்று காலி தி கில்லர் என்ற படத்தின் டிரைலர் என்று நினைத்து சோனி தயாரிப்பு நிறுவனம் 90 நிமிட படத்தை வலைதளத்தில் ஏற்றியது. இதை முதலில் cbr.com என்ற வலைதளமே கண்டுபிடித்து அறிவித்தது. இந்தப் படம் வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும்வரை யூ ட்யூபில் 8 மணிநேரம் வரை லைவ் செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தை யூ ட்யூபில் பணம்கட்டி பார்க்க முடியும். யூ ட்யூப் பயன்பாட்டாளர்கள் மத்தியில் இந்த படம் பிரபலமடைந்து வருகிறது.
காலி தி கில்லர் என்ற இந்த படத்தை ஜான் மேத்திவ்ஸ் இயக்கியுள்ளார். ரிச்சர்ட் கேப்ரல் நடித்துள்ளார். வருகின்ற ஆகஸ்ட் 18 ஆம் தேதி 2018 ல் இப்படம் திரையரங்குகளுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.