மதுபான பார் ஒன்றில் மர்மநபர்கள் சுட்டதில் 6 பெண்கள் உட்பட 11 பேர் பலியான சம்பவம் பிரேசில் நாட்டில் நடந்துள்ளது.
![shoot out in brazil bar](http://image.nakkheeran.in/cdn/farfuture/gy-Y36lhB3WkWz68YS_wvztU3gKi2vf2W2wY5nTr1O4/1558330525/sites/default/files/inline-images/bar_7.jpg)
பிரேசில் நாட்டின் பாரா மாகாணத்தில் உள்ள பெலம் நகரத்தில் உள்ள பார் ஒன்றில் நேற்று இரவு துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர்கள் சரமாரியாக சுட்டுள்ளனர். போதைப்பொருள் விற்பனைக்கு பெயர் போன இந்த பாரில் பலர் மது மற்றும் போதை பொருள் வாங்க வருவார்கள். அப்படி போதைப்பொருள் வாங்க வந்த போது ஏற்பட்ட மோதலால் திடீரென பாருக்குள் நுழைந்த நபர்கள் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளனர்.
இதில் 6 பெண்கள் உட்பட 11 பேர் பலியாகியுள்ளனர். தாக்குதல் நடத்திய நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரில் 6 பெண்கள் உட்பட 11 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.