Skip to main content

கொரோனா வைரஸ் எதிரொலி - சீனாவில் பள்ளிகளுக்கு விடுமுறை, நிகழ்ச்சிகளுக்கு தடை!

Published on 14/02/2020 | Edited on 14/02/2020


சீனாவில் ஹவுன் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 



சில நாடுகளில் அந்த வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை இந்தியாவில் எவ்வித உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெறவில்லை. ஆனால் உலக நாடுகளில் சில உயிரிழப்புக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 40,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1483 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் சீனா முழுவதும் அதிகமாக இருப்பதால் அந்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் விரைவில் நடைபெற இருக்கின்ற உலக தலைவர்கள் கலந்துகொள்ளும் மாநாட்டையும் சீன அரசு ரத்து செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்