Published on 06/05/2019 | Edited on 06/05/2019
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவிலிருந்து முர்பான்ஸ்க்கு 73 பயணிகள் மற்றும் 5 ஊழியர்களுடன் சூப்பர் ஜெட் என்ற புறப்பட்டது.
தொழில்நுட்ப கோளாறால் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தீ பிடித்தது என்று கூறப்படுகிறது. இதனால் அந்த விமானம் மாஸ்கோ விமானநிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.
தரையிறங்கியதும் தீ வேகமாக பரவத் தொடங்கியது. பயணிகள் அனைவரும் அவசர வழியில் வெளியே வந்தனர். இருந்தும் 2 குழந்தைகள் உட்பட 41 பயணிகள் உயிரிழந்தனர். விமான விபத்து குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார்.