Published on 11/10/2019 | Edited on 11/10/2019
மிகவும் பிற்போக்குத்தனமான அரசு என்று கருதப்பட்ட சவுதி அரேபியா தனது ராணுவத்தில் பெண்களையும் அனுமதிக்கப் போவதாக அறிவித்துள்ளது. அந்த நாட்டின் பொருளாதார, சமூக சீர்திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக பெண்களையும் ராணுவத்தில் அனுமதிக்க முடிவு செய்திருப்பதாக அரசு அறிவித்துள்ளது.
பத்திரிகையாளரை ஆசிட் ஊற்றி கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சவூதி இளவரசர் முகமது பின் சல்மான், கடந்த ஒரு ஆண்டாக பெண்களுக்கான சில சீர்திருத்தங்களை அறிவித்து வருகிறார். கடந்த ஆண்டு பெண்கள் கார் ஓட்டலாம் என்றும், ஆண் துணையின்றி வெளிநாடு போகலாம் என்றும் அனுமதி கொடுக்கப்பட்டது.
பெண்களுக்கு இப்படி சலுகை அளிக்க முன்வந்தபோதும், பெண்களுக்கான உரிமைகளுக்காக போராடும் அமைப்புகளின் தலைவர்களை சவூதி அரசு கைது செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.