Skip to main content

மெட்டாவர்ஸ்: இந்தியாவின் பங்கு குறித்து மகிழும் மார்க் ஜுக்கர்பெர்க்!

Published on 15/12/2021 | Edited on 15/12/2021


 

mark

ஃபேஸ்புக் நிறுவனம், மெட்டாவர்ஸ் என்ற மெய்நிகர் உலகத்தை வடிவமைப்பதற்கான முதற்படியாக தனது பெயரை மெட்டா என அண்மையில் மாற்றிக்கொண்டது. அதனைத்தொடந்து மெட்டாவர்ஸை அமைக்கும் பணியில், மெட்டா நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

 

இந்தநிலையில் பியூல் ஃபார் இந்தியா நிகழ்ச்சியில் பேசிய மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்,  மெட்டாவர்ஸை உருவாக்குவதில் இந்தியா பெரும் பங்கு வகிக்கப் போகிறது.

 

இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது; கிரியேட்டர்கள் மற்றும் டெவலப்பர்கள் எல்லாம் எங்கிருந்து வரப் போகிறார்கள், யார் உண்மையில் மெட்டாவர்ஸின் அடித்தளத்தை உருவாக்கப் போகிறார்கள் என்ற அடிப்படையில் அடுத்த தலைமுறை எப்படி இருக்கும் என்பதைப் பற்றி நாம் சிந்திக்கும்போது, இந்தியா அதில் பெரும் பங்கு வகிக்கப் போகிறது என்பது தெளிவாகிறது.

 

இந்த எதிர்காலத்தை (மெட்டாவர்ஸை)  உருவாக்குவதில் இந்தியா வகிக்கப்போகும் பங்கைப் பற்றி நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவின் பொறியாளர்கள், டெவலப்பர்கள் மற்றும் கிரியேட்டர்கள்  மற்றும் துடிப்பான ஸ்டார்ட்-அப் சூழல் அமைப்பும் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இவ்வாறு மார்க் தெரிவித்துள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்