தமிழகத்தில் படித்துவிட்டு வேலையில்லா பட்டதாரிகள் லட்சக்கணக்கில் இருக்கின்ற சூழ்நிலையில் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய அரசு பணியிடங்களை நியமனம் செய்வதற்கு மாறாக தேவையான பணியிடங்களை அவுட் சோர்ஸிங் முறையில் நியமனம் செய்யவும் சில பணியிடங்களை ஒழிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அரசாணை 56 பிறப்பித்து ஆதிசேஷய்யா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகதிலுள்ள பல லட்சம் படித்த இளைஞர்களின் அரசு வேலை கனவாக மாறிவிடும். எனவே இந்த குழுவை கலைக்ககோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. சிதம்பரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க வட்டார தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணன் தமிழக அரசின் அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனி, வட்டார தலைவர்கள் கலியமூர்த்தி, பன்னீர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு படித்து வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஏற்படும் அவலநிலையை விளக்கி பேசினார்கள்.
- காளிதாஸ்