Skip to main content

ஒரு கிலோ தக்காளி 50 லட்சம்...! குரல்வளையை நெறிக்கும் விலைவாசி...!!

Published on 01/09/2018 | Edited on 01/09/2018

 

PRICE


 

 

 

தென் அமெரிக்கா நாடான வெனிசுலா தற்போது பெரிய பொருளாதார சிக்கலை சந்தித்துள்ள நிலையில் அந்த நாட்டின் புது கரன்சி நோட்டுகளை அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ வெளியிடவுள்ளார்.

 

தற்போது அங்கு பெரும் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ள  நிலையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் எவ்வளவு பணத்தை செலவிட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறிப்பிட்ட அத்தியாவசிய பொருள்களையும் அந்த பொருளை வாங்க கொடுக்க வேண்டிய பணத்தையும் அடுக்கி ஒருசேர படமெடுத்து விளக்கியுள்ளார் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் புகைப்படக்காரர் கார்லோஸ் கார்சியா ரவ்லிங்ஸ் என்பவர்.

 

  

அதன்படி பார்க்கையில் ஒரு கிலோ தக்காளியின் விலை ,மட்டும் 50 லட்சம் பொலிவார்கள். இரு கைப்பிடி அளவு கேரட்டுகளின் விலை 30 லட்சம் பொலிவார்கள். ஒரு கிலோ பாலாடைக்கட்டியின் விலை 75 லட்சம் பொலிவார்கள்.  வெனிசூலா தலை நகர் காரகாசில் 2.4 கிலோ கோழிக்கறி விலை 1.46 கோடி பொலிவார்கள். ஒரு கிலோ அரிசியின் விலை 25 லட்சம் பொலிவார்கள். அண்மையில் கழிப்பறைத் தாள் உருளை 26 லட்சம் பொலிவாருக்கு விற்கப்பட்டது. ஒரு கிலோ மாட்டுக்கறியின் விலை 95 லட்சம் பொலிவார்கள். குழந்தைகள் அணியும் ‘நேப்பிஸ்’ விலை 80 லட்சம் பொலிவார்கள். ஒரு பாக்கெட் சானிட்டரி நாப்கின்களுக்கு 35 லட்சம் பொலிவார்கள் செலவிட வேண்டியிருக்கும். தற்போது அங்கு புது நோட்டுகள் வெளியிடப்பட இருப்பதால் அங்குள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்களை வீட்டில் பதுக்கிவைத்து பாதுகாக்க தொடங்கியுள்ளனர். 

சார்ந்த செய்திகள்