மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போதே பிரபல காமெடியன் உயிரிழந்த சம்பவம் துபாயில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![popular standup comedian passed away on stage during his performence](http://image.nakkheeran.in/cdn/farfuture/6JRzUDNiWnwL_-NPuz8hKdjdCcP4f9LV3i3pETTv9NU/1563790849/sites/default/files/inline-images/cmd.jpg)
இந்தியாவை சேர்ந்தவர் மஞ்சுநாத் என்ற 36 வயது ஸ்டாண்டப் காமெடியன். உலகம் முழுவதும் இவரது ஸ்டாண்டப் காமெடி நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு உள்ளது. அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை துபாயில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசிக்கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். ஆனால் அவர் வேன்டுமென்றே விழுவதாக நினைத்த ரசிகர்கள், சிரித்தபடியே அதனை பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஆனால் கீழே விழுந்தவர் நீண்ட நேரம் எழாமல் இருந்ததை அடுத்து அங்கிருந்த ஏற்பாட்டாளர்கள் அவரிடம் சென்று பார்த்துள்ளனர். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் மாரடைப்பு காரணமாக இறந்தது தெரிய வந்துள்ளது. மேடையில் பார்வையாளர்கள் முன்னிலையில் இளம் காமெடியன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.