Skip to main content

படிக்காத சிறுவனை புல்லை உண்ண வைத்த ஆசிரியர்... கண்டுகொள்ளாத பெற்றோர்... வழக்கு பதிவு செய்து விசாரிக்கும் பாகிஸ்தான் காவல்துறை...

Published on 31/05/2019 | Edited on 31/05/2019

7 வயதான சிறுவன் வகுப்பறையில் பாடத்தை படிக்காததால் கோபமடைந்த ஆசிரியர் அந்த சிறுவனை கட்டாயப்படுத்தி புல்லை உன்ன வாய்த்த சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.

 

pakistani teacher feed grass to school student as punishment

 

 

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் லோத்ரான் நகரில் உள்ள பதேபூரில் உள்ள அரசு பள்ளியில் ஹமீத் ராசா என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இரண்டாம் வகுப்புக்கு படமெடுக்கும் அவர், அந்த வகுப்பில் உள்ள கஸ்கான் என்ற மாணவனை வகுப்பில் முன் எழுந்து வந்து பாடத்தை படிக்க சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த மாணவன் படிக்க சிரமப்பட்ட நிலையில், வெளியே சென்ற ஆசிரியர் அங்கு இருந்து புற்களை பிடுங்கி வந்து அந்த சிறுவனை கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்துள்ளார்.

இது குறித்து அந்த சிறுவன் அவனது பெற்றோரிடம் கூறிய நிலையில் அவர்கள் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அந்த ஆசிரியரிடம் இதுகுறித்து பேசவும் இல்லை. இந்நிலையில் இந்த விவகாரம் மாவட்ட போலீஸ் அதிகாரியின் கவனத்துக்கு வந்ததும், இது குறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் பதேபூர் போலீசார் ஆசிரியர் ஹமீத் ராசா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்