
இந்தியப் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினை தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் புதின் இன்று தனது 68 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளுக்கு உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு நாட்டினைச் சேர்ந்த தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினை தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "எனது நண்பர் அதிபர் விளாடிமிர் புதினுக்கு, அவரது பிறந்தநாளையொட்டி இன்று வாழ்த்துத் தெரிவித்தேன். இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான சிறப்புமிக்க மூலோபாய நட்புறவை வலுப்படுத்துவதில் அவர் செய்த மகத்தான தனிப்பட்ட பங்களிப்பு பாராட்டுக்குரியது" எனத் தெரிவித்துள்ளார்.