Skip to main content

மோடியின் ரஷ்ய பயணம்- சோச்சியில் அதிபர் புதினுடன் சந்திப்பு

Published on 21/05/2018 | Edited on 21/05/2018

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க மோடி ரஷ்யாவிற்கு விமானம் மூலம்  பயணம் மேற்கொண்டுள்ளார். சோச்சில் நடைபெறும் இந்த சந்திப்பில் அமெரிக்கா ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகியதால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

modi

 

ஈரான் அமெரிக்க மோதலால் இந்தியாவில் கச்சா எண்ணையின் இறக்குமதி குறைந்துள்ளது. மேலும் ஈரானில் அமையவிருக்கும் சாபர் எனும் ராணுவ துறைமுகம் அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே புதினுடனான சந்திப்பில் இதுபற்றி பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆப்கானிஸ்தான், சிரியா குறித்தும் பின் வரும் முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச கூட்டங்கள் குறித்தும் விவாதிக்க போவதாக அறியப்படுகிறது.

 

இந்த ரஷ்ய பயணம் குறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் '' தோழமை ரீதியான ரஷ்ய மக்களுக்கு வணக்கம். சோச்சி செல்வதற்கும் ரஷ்ய அதிபர் புதினை சந்திப்பதற்கும் மிகுந்த ஆவலோடு இருக்கிறேன்'' என பதிவிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்