Published on 27/10/2018 | Edited on 27/10/2018

இரண்டு நாட்களாக நடைபெற உள்ள இந்தியா - ஜப்பான் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, இரண்டு நாள் அரசு முறை பயணமாக டெல்லியிலிருந்து ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி. மேலும் புறப்படுவதற்கு முன்பு பிரதமர் மோடி, ஜப்பானுடனான நம் உறவு இன்னும் பலம்பெறும் என்றும், மேலும் இந்தியாவில் அதிக முதலீடு செய்வதில் ஜப்பான் முன்னிலையில் உள்ளதாகவும் தெரிவிதார். குறிப்பாக மும்பை - அஹமதாபாத் அதிவேக இரயில் திட்டத்தின் மூலம் நமது பொருளாதாரத்திற்கு ஜப்பான் வலிமை சேர்த்துள்ளது என்றும் தெரிவித்தார்.