Published on 10/09/2019 | Edited on 10/09/2019
130 கிலோமீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருந்த ரோலர்கோஸ்டரில் இருந்து தவறி விழுந்த போனை இளைஞர் ஒருவர் சரியாக பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நியூசிலாந்தைச் சேர்ந்த சாமுவேல் கெம்ஃப் என்பவர் ஸ்பெய்ன் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அங்குள்ள புகழ்பெற்ற அதிவேக ரோலர் கோஸ்டரில் பயணித்துள்ளார். மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் அந்த ரோலர் கோஸ்டரில் பாதி வழியில் பயணித்துக்கொண்டிருக்கும் போது முன்னால் அமர்ந்திருப்பவரின் போன் தவறி விழுந்து காற்றில் பறந்துள்ளது. சட்டென்று அதைக் கவனித்த கெம்ஃப், அந்த போனை லாவகமாக கேட்ச் பிடித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.