Published on 08/09/2018 | Edited on 08/09/2018
ஈரானின் தென்கிழக்கு பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். ரிக்ட்டர் அளவுகோலில் 5.6 என பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள பல கிராமங்களில் வீடுகள் சேதமாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 2 பேர் இறந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் ஒரு பெண் இடர்பாடுகளில் சிக்கி இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஈரானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நிலையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 700 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.