துபாயில் வாழும் இந்திய வம்சாவளி சிறுமி ஒருவர் தன் பணக்கார தந்தை கொடுத்த பிறந்தநாள் தங்க கேக்கை கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.
துபாயில் கட்டுமான நிறுவனம் வைத்திருப்பவர் விவேக் கல்லித்தில் இவரது பூர்வீகம் கேரளா. துபாயில் வசிக்கும் இவருக்கு வர்னிகா, தியூதி, பிரணதி என்ற மூன்று குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்துள்ளனர். எனேவ அவர் அவர்களின் பிறந்தநாளை வெகு விமர்சையாக வருடா வருடம் கொண்டாடி வருகிறார். தற்போது அவருடைய மூன்று மகள்களுக்கும் 12 வயது. இந்நிலையில் அவர்களுடைய பிறந்தநாளுக்கு சுமார் 19 லட்சம் மதிப்புள்ள தங்க கேக்கை பரிசளித்துள்ளார். அந்த கேக்கானது துபாய் பர்சாவிலுள்ள மலபார் கோல்ட் அண்ட் டைமென்ட் நிறுவனத்தால் செய்து தரப்பட்ட 24 கேரட் கோல்ட் கேக் ஆகும். அதன் மேல் உள்ள பூக்கள் போன்ற அலங்காரம் துருக்கிலிருந்து வரவழைக்கபட்டது.
இந்த தங்க கேக் பரிசை தனது மகள்களுக்கு கொடுத்தபோது அந்த மூன்று பேர்களில் ஒருவரான பிரணதி தனது மற்ற சகோதிரிகளிடம் பேசி கேரளாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிதியாக இந்த கேக்கை கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்து தனது தந்தையிடம் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். தந்தையும் மகள்களின் ஆசையை நிறைவேற்ற அந்த கேக்கை பணமாக மாற்றி கேரள வெள்ள நிவாரணத்திற்கு நிதியாக கேரள முதல்வரிடம் கொடுத்துள்ளார். அந்த மூன்று சிறுமிகளின் இந்த எண்ணத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இதுபற்றி அந்த சிறுமி கூறுகையில் இந்த தங்க கேக் வீட்டில் அலமாரியில் அழகு பொருளாக இருப்பதற்கு கண்ணீரில் வாடும் மக்களுடைய கண்ணீரை துடைத்தால் அதன் மதிப்பு அதிகரிக்கும் என கூறியுள்ளார்.