Skip to main content

மஹிந்த ராஜபக்சே வெளிநாடு தப்பிச் செல்லத் தடை! 

Published on 12/05/2022 | Edited on 12/05/2022

 

Mahinda Rajapaksa banned from fleeing abroad!

 

மஹிந்த ராஜபக்சே வெளிநாடு தப்பிச் செல்ல கொழும்பு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

 

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் அரசுக்கு எதிராக போராட்டங்களும், வன்முறையும் நடைபெறுவதால், இலங்கை அரசு திணறி வருகிறது. இதன் காரணமாக, மஹிந்த ராஜபக்சே கடந்த மே 9- ஆம் தேதி அன்று தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். போராட்டக்காரர்கள் மீது மஹிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள், தாக்குதல் நடத்தியதால், அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்கள் அவரின் வீடுகள் மற்றும் ஓட்டல்களுக்கு தீ வைத்தனர். 

 

இதனிடையே, பிரதமர் மாளிகையிலிருந்து வெளியேறிய மஹிந்த ராஜபக்சே மற்றும் அவரின் குடும்பத்தினர் திருகோணமலை பகுதியில் தலைமறைவாகியிருப்பதாகவும், அங்கிருந்து வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகின. இந்த நிலையில், மஹிந்த ராஜபக்சே தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கொழும்பு நீதிமன்றம், மஹிந்த ராஜபக்சே உட்பட 14 பேர் வெளிநாடு செல்ல தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
 

சார்ந்த செய்திகள்