Skip to main content

"சுலைமான் படுகொலைக்கு காரணமானவர்களுக்கு"... ஈரானின் எச்சரிக்கை...

Published on 03/01/2020 | Edited on 03/01/2020

குவாட்ஸ் படையின் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்ட நிலையில், ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

iran about soleimani demise

 

 

கடந்த வாரம் ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலை மீது, ஈரான் ஆதரவு பெற்ற கடாயெப் ஹிஸ்புல்லா படை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதற்குப் பதிலடியாக அந்தப் படையினர் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், ஹிஸ்புல்லா படை ஆதரவாளர்கள் காபூலிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு திரண்டு போராடியதோடு, தூதரகத்தையும் சூறையாடினர். இந்த சூழலில், இதற்கு பதிலடியாகவே இந்த தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இன்று அதிகாலை பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய இந்த தாக்குதலில், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், இதற்கு ஈரானின் மூத்த மதத் தலைவர் அயத்துல்லா காமெனி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்த அவரது பதிவில், "இத்தனை ஆண்டுகளாக காசிம் சுலைமாணி மேற்கொண்ட இடைவிடாத முயற்சிகளுக்கான வெகுமதி தான் தியாகம். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும். கடவுள் விருப்பத்தில் அவர் அழைக்கப்பட்டிருந்தாலும், அவருடைய குறிக்கோள் மீதான பணிகள் எந்த காரணத்தை கொண்டும் நிறுத்தப்படாது. காசிம் சுலைமான் படுகொலைக்கு காரணமானவர்களுக்கு நிச்சயம் தக்க பதிலடி காத்திருக்கிறது" என தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்