அயர்லாந்து தமிழர்கள் ஒருங்கிணைந்து உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100 நாட்கள் அறவழியில் போராடிய நம் மக்களை கொன்று குவித்த இந்திய-தமிழக கொடுங்கோல் ஆட்சியை கண்டித்தும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரியும், அறவழி போராளிகள் & மக்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலைகளும் வன்முறை வெறியாட்டங்களும் இனி இந்திய &தமிழக அரசு செய்யக் கூடாது என்றும் மக்கள் மீது அடக்கு முறைகள் ,அட்டுழியங்களை இந்திய-தமிழக அரசுகள் உடனடியாகத் நிறுத்தப்பட வேண்டும் என்று கோரியும், தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்ட வாழ்வுரிமை போராளிகளுக்கு நீதி வழங்க வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி அனைவரின் ஒப்புதலுடன் கையொப்பம் இட்ட ஐநா மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்ப உள்ள முறையீட்டு கடிதத்தின் நகலை, அயர்லாந்து இந்திய தூதரகத்தில் கொடுத்தனர்.
மேலும் இதுபோன்ற அடக்குமுறைகளும்,கொலைகளும் தொடர்ந்தால் ஐரோப்பிய ஒன்றியத்தில் வழக்கு தொடர்வோம் என்றும், ஒவ்வொருவரும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.