சீனாவின் ஷாங்காய் நகரின் வடக்கு பகுதியில் உள்ள ரசாயன கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 47 பேர் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து சீன ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், “ சீனாவின் ஷாங்காய் நகரின் வடக்கு பகுதியில் உள்ள ரசாயன கிடங்கு ஒன்றில் வியாழக்கிழமை மாலை வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு படையினர் விரைந்து கட்டுப்படுத்த முடியாத நிலையிலி 47 பேர் பலியாகினர். மேலும் 100 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் அந்த வழியாக பள்ளிக்கு சென்ற குழந்தைகளும் அடக்கம். மேலும் இந்த தீ விபத்தினால் அருகிலுள்ள வீடுகளின் கதவு, ஜன்னல்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்த இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு இதே போல சீன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட ரசாயன வாயு வெளியேற்றத்தில் 23 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.