கடந்த 30 ஆண்டுகளாக தனது தாயின் அழுகிய உடலுடன் வசித்து வந்த மூதாட்டி உயிருக்கு ஆபத்தான முறையில் மீட்கப்பட்டுள்ளார்.

ukraine

உக்ரைன் நாட்டின் மைக்கோலைவ் பகுதியில் உள்ளது அடுக்குமாடி குடியிருப்பு. நடுத்தர மக்கள் மட்டுமே வசிக்கும் இந்தக் குடியிருப்பில் எப்போதும் மூடியிருக்கும் ஒரு வீட்டினுள் அலறல் சப்தம் கேட்டுள்ளது. சப்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் கதவை உடைப்பதற்கு முன் காவல்துறை மற்றும் மருத்துவமனைக்கு தகவல் அளித்துள்ளனர்.

உள்ளே சென்று பார்த்தவர்களுக்கு அந்த பேரதிர்ச்சி காத்திருந்தது. கால்கள் செயல்படாத நிலையில் 77 வயது மூதாட்டி ஒருவர்வீட்டின் முகப்பறையில் அமர்ந்திருந்தார். வீடு முழுவதும் செய்தித்தாள்கள் குவிக்கப்பட்டு, ஒரு அசாதாரணை சூழலை ஏற்படுத்தியுள்ளது. வீட்டினுள் இருந்த இன்னொரு அறையில் அந்த மூதாட்டியின் தாயார் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளார். தலையில் வெள்ளைத்துணி, கால்களில் ஷூக்கள் என இருந்த அந்த உடலைச் சுற்றி சில பூஜைப்பொருட்களைக் கண்டவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Advertisment

அந்த வீட்டில் பல ஆண்டுகளாக இருந்துவரும் அந்த மூதாட்டி யாரோடும் பேசியதில்லை. ஆனாலும், அக்கம்பக்கத்தினர் அவரது வாசலில் உணவு வைப்பார்களாம். தற்போது அந்த மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது தாயாரின் உடல் கைப்பற்றப்பட்டு தடயவியல் நிபுணர்களின் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.