Skip to main content

90 ஆண்டுகளில் முதன்முறை... வரலாறு படைத்த க்ரெட்டா தன்பெர்க்...

Published on 12/12/2019 | Edited on 12/12/2019

உலகநாடுகள் பங்குபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் 74வது பொதுக்கூட்டத்தில் டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்களை கடுமையாக விமர்சித்து இணைய உலகில் பிரபலமானவர் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமியான க்ரெட்டா தன்பெர்க்.

 

greta thunberg named as person of the year by times

 

 

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், உலக வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி ஸ்வீடன் நாடாளுமன்ற வளாகம் முன்பு தனி ஒரு ஆளாக போராட்டம் நடத்தி உலக மக்களின் கவனத்தை இவர் பெற்றார். அதன்பின்னர் ஐ.நா வில் இவரின் உரையும் உலக அளவில் பெரும் ஆதரவை பெற்றது. இந்நிலையில் டைம்ஸ் இதழின் 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதர் என்ற பட்டத்தை க்ரெட்டா தன்பெர்க் பெற்றுள்ளார்.

1927 ஆம் ஆண்டு முதல் டைம்ஸ் இதழ் ஒவ்வொரு ஆண்டுக்கான சிறந்த நபர்களின் பெயரை வெளியிட்டு கௌரவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 92 ஆண்டுகளில் இந்த விருதினை பெற்ற மிக இளம் வயது நபர் என்ற சாதனையை க்ரெட்டா படைத்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டைம்ஸ் இதழின் ஆசிரியர் எட்வர்ட் ஃபெல்செந்தல், ''இந்த ஆண்டு கிரகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையின் வலிமையான குரலாக கிரேட்டா மாறினார், உலகளாவிய பருவநிலை மாற்றத்திற்கான இயக்கத்தை அவர் வழி நடத்துகிறார்'' என தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்