மெக்ஸிகோ நாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் 'த்ரீ கிங்ஸ் டே' எனப்படும் விழாவின் போது, அங்குள்ள குழந்தைகளும் பெற்றோர்களும் பரிசுப் பொருட்களைப் பரிமாறிக் கொள்வார்கள். இந்த வாரம் நடைபெற்ற அப்படியொரு விழாவின்போது, தனது தாய்க்கு மகிழ்ச்சியை பரிசாக அளிக்கும்படி 10 வயது சிறுமி ஒருவர் கடவுளுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனது கடைசி நிமிட வேண்டுதல்களை கடவுளுக்கு ஒரு கடிதமாக எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் அந்த சிறுமி. அதில், 'தனது தாயை உலகிலேயே மகிழ்ச்சியான நபராக வைத்திருக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டிக் கொள்ளும் அந்த சிறுமி, நான் பிறந்ததனால் தான் என் தாய்க்கு இவ்வளவு கஷ்டங்கள். என்னால்தான் என் தந்தை அம்மாவை விட்டு பிரிந்து சென்று விட்டார். என் தாயின் சந்தோசங்களை நானே கெடுத்துவிட்டேன். இந்த நல்லநாளில் நான் கடவுளிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான், எனது உயிரை நீங்கள் பரிசாக எடுத்துக்கொண்டு, எனது தாய்க்கு வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியை பரிசாக தாருங்கள். இந்த உலகிலேயே அவர்தான் மகிழ்ச்சியான நபராக இருக்க வேண்டும். நான் உங்களை விரும்புகிறேன் அம்மா' என அவர் அந்த கடிதத்தில் எழுதி விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 10 வயது சிறுமியின் இந்த தற்கொலை உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.