Skip to main content

புஷ்ஷின் உடலருகிலேயே இருக்கும் ‘சல்லி’

Published on 03/12/2018 | Edited on 03/12/2018
sully


 

மனிதனுக்கு மிக நெருங்கிய, உன்னதமான விலங்கு நாய். நாய் என்றும் நன்றி மறவாது. அதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.


அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபள்யூ. புஷ் கடந்த 1ம் தேதி புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். அவரது வளர்ப்பு நாயான சல்லி அவரது உடல் அருகிலேயே மிக சோகமாக இருக்கும் இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. புஷ் நடக்கமுடியாமல் வீல் சேரில் இருக்கும்போது, அவருக்கு கதவு திறந்துவிடுவது, தேவையான பொருட்களை எடுத்து வருவது என பல்வேறு உதவிகளை அது செய்து வந்தது. சல்லி எங்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் என புஷ் ட்விட்டரில் பகிர்ந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 6ம் தேதி புஷ்ஷின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்