பொழுதுபோக்கு என்பதை கடந்து அன்றாட செய்திகளை தெரிந்துகொள்ளவும் இன்றைய தலைமுறை அதிகம் பயன்படுத்துவது ஃபேஸ்புக் தான்.
இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அன்றாட நாட்டு நடப்புகளை எங்கிருந்து வேண்டுமானாலும் தெரிந்துகொள்ள உதவுகிறது ஃபேஸ்புக். இதனை புரிந்துகொண்ட ஃபேஸ்புக் இதற்காகவே தனியாக ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. News Tab என பெயரிடப்பட்டுள்ள இதன்மூலம் செய்திகளை வெளியிட குறிப்பிட்ட சில செய்தி நிறுவனங்களுடன் ஃபேஸ்புக் ஒப்பந்தமிடுகிறது. ஃபேஸ்புக் News Tab குறித்தான அறிவிப்பை நேற்று ஃபேஸ்புக் சர்வதேச துணைத் தலைவர் கேம்பெல் ப்ரவுன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அக்டோபர் இறுதிக்குள் சுமார் 200 பதிப்பாளர்கள் உடன் இந்த Tab செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக செய்தி நிறுவனங்களுடன் மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி மூலம் ஃபேஸ்புக்கில் செய்திகளை மட்டும் பயனாளர்கள் தனி பிரிவாக பார்த்து வாசித்துக்கொள்ள முடியும்.