Skip to main content

உயிரை கொன்ற வேதாந்தாவை வெளியேற்ற வேண்டும்- பிரிட்டன் எம்.பி ஜான் மெக்டொனல்

Published on 26/05/2018 | Edited on 26/05/2018

லண்டன் பங்கு சந்தையிலிருந்து வேதாந்த நிறுவனத்தை வெளியேற்ற வேண்டுமென பிரிட்டனின் எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி வலியுத்தியுள்ளது.

 

இந்தியாவில் தமிழகத்தில் வேதாந்தாவிற்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை தருகிறது. இதுபோன்ற மனித உரிமை மீறலில் இடம்பிடித்துள்ள வேதாந்தா நிறுவனத்தின் மீது  லண்டன் பங்கு சந்தை நெறிமுறையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரிட்டன் எதிர்கட்சியான தொழிலாளர் கட்சியின் எம்.பி ஜான் மெக்டொனால் குற்றம்சாட்டியுள்ளார் .

 

john

 

 

 

உலக அளவில் பல நாடுகளில் சட்டவிரோதமாக சுரங்கம் வைத்திருக்கும் வெந்தந்தா ரிஸோர்ஸ் நிறுவனம் மக்களின் உரிமைகளை பறிப்பதாகவும், சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்கும்  வகையில் தொழிற்ச்சாலைகளை கட்டமைத்திருப்பதாகவும். தங்களின் சுய லாபத்திற்காக சுரங்கங்களை சுற்றி உள்ள மக்களை வழிவிடங்களில் இருந்து  வலுக்கட்டாயமாக விரட்ட முயற்சிப்பதாகவும் ஜான் மெக்டொனால் குற்றம்சாட்டியுள்ளார் .

 

மேலும் இந்தியா, சாம்பியா உள்ளிட்ட பல நாடுகளில் வெந்தந்தா நிறுவனம் மனித உரிமைகளை மீறுவதாக அம்னஸ்டி இன்டெர்நேஷனல் அமைப்புகள் குற்றசாட்டியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் இதுபற்றி லண்டன் பங்கு சந்தை கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.   

சார்ந்த செய்திகள்