Published on 20/08/2018 | Edited on 20/08/2018

இந்தோனேசியா லாம்போக் தீவில் நேற்று இரவு 10 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால், கட்டடங்கள் சரிய பல மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்த மாத தொடக்கத்திலேயே லாம்போக் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பல கட்டடங்கள் சரிந்து விழுந்து தரைமட்டமாகின. இதனால், 400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கின்றனர் . ஒரே மாதத்தில் தொடர்ந்து இரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.