Published on 13/10/2022 | Edited on 13/10/2022
பல மாதங்களாக உக்ரைன் ரஷ்யா இடையே போர் சூழ்நிலை வந்த நிலையில் மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலை உக்ரைன் மீது தொடுத்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தீவிரத் தாக்குதலை நடத்தி வரும் நிலையில் அண்மையில் டினிப்ரோ நகர் பகுதியில் சாலையில் குண்டுமழை பொழியும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருமானால் கண்டிப்பாக மூன்றாம் உலகப் போர் உருவாகும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துப் பேசுகையில். நேட்டோ அமைப்பில் உக்ரைன் நாட்டை இணைப்பதற்கு மேற்கத்திய நாடுகள் உதவி செய்வதன் மூலம் மூன்றாம் உலகப் போர் ஏற்பட அந்த நாடுகளே நேரடி காரணமாக அமையும் என்று குறிப்பிட்டார்.