Skip to main content

தாலிபன் - ராணுவம் மோதல்: ஆப்கானிஸ்தானில் இந்திய ஊடகவியலாளர் பலி!

Published on 16/07/2021 | Edited on 16/07/2021

 

danish siddiqui

 

இந்தியாவை சேர்ந்த புகைப்பட ஊடகவியலாளர் டேனிஷ் சித்திகி, ராய்ட்டர்ஸ் செய்தி முகமையில் பணியாற்றி வந்தார். தற்போது ஆப்கானிஸ்தானில் தாலிபன் தீவிரவாதிகள், தொடர் தாக்குதல் நடத்தி அந்தநாட்டின் பல பகுதிகளை கைப்பற்றி வரும் நிலையில், டேனிஷ் சித்திகி ஆப்கான் இராணுவத்துடன் இணைந்து தங்கி இராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்குமிடையேயான மோதல்களை பதிவு செய்து வந்தார்.

 

இந்தநிலையில் அவர், தாலிபன் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியாகியுள்ளார். ரோஹிங்கியா அகதிகளின் இன்னல்களை ஆவணப்படுத்தியதற்காக ஊடக உலகின் மிக உயரிய விருதான புலிட்சர் விருதினை வென்றுள்ள டேனிஷ் சித்திகி, இந்தியாவில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு, ஹாங்காங் போராட்டங்கள், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக டெல்லியில் ஏற்பட்ட கலவரம் உள்ளிட்ட நிகழ்வுகளில் எடுத்த புகைப்படங்களும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

 

டேனிஷ் சித்திகி மறைவுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புதுறை அமைச்சர் அனுராக் தாக்கூர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு தரப்பினரும் பத்திரிகையாளர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

 

டேனிஷ் சித்திகி எடுத்த புகைப்படங்களில் ஒன்று:

 

covid

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரம்; கைது செய்யப்பட்ட 2 பேருக்கு கால் முறிவு!

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
2 persons arrested in the case of attack on the journalist suffered a broken leg

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் நேசபிரபு. இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர் வழக்கம்போல் கடந்த 24 ஆம் தேதி செய்தி சேகரித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த ஆயுதத்தால் நேசபிரபுவை சரமாரியாக வெட்டி தப்பி ஓடியுள்ளனர்.

இதில் நேசபிரபு படுகாயமடைந்தார். இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயமடைந்த நேசபிரபுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய கும்பலைத் தேடி வந்த போலீஸார், 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 2 பேருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியபோது தடுக்கி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவருக்கும் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்த பிறகு இன்று நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். 

Next Story

தமிழக பாஜக மாநிலத் தலைவரை கண்டித்து ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Published on 26/01/2024 | Edited on 26/01/2024

 

பத்திரிகையாளர்களைக் கீழ்த்தரமாகப் பேசிவரும் தமிழக பாஜக மாநிலத் தலைவரைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (25-01-2024) மாலை 4 மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த மு.அசீப் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் நக்கீரன் ஆசிரியர், தி இந்து குழுமத்தின் தலைவர் என். ராம், சன் நியூஸ் தொலைக்காட்சி ஆசிரியர்  மு. குணசேகரன் எனப் பல்வேறு மூத்த பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டனர்.