உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.72 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல் உலகளவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8.87 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும் உலகளவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.93 கோடியாக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக அமெரிக்காவில் 64 லட்சம் பேர், பிரேசிலில் 41 லட்சம் பேர், ரஷ்யாவில் 10 லட்சம் பேருக்கும் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பால் அமெரிக்காவில் 1.91 லட்சம் பேரும், பிரேசிலில் 1.24 லட்சம் பேரும், ரஷ்யாவில் 17,820 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 42 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் கரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஆனாலும் மூன்றாவது இடத்தில் இருக்கும் பிரேசிலை காட்டிலும் இந்தியாவில் உயிரிழப்புகள் குறைவாக உள்ளது. அங்கு 1.5 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் 71 ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.