Skip to main content

கரோனா வைரஸ் தோற்றம்: நிபுணர் குழுவுக்கு அனுமதி வழங்கிய சீனா!

Published on 11/01/2021 | Edited on 11/01/2021

 

china

 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ், முதன்முதலில் சீனாவிலிருந்து பரவத் தொடங்கியது. இந்த வைரஸை சீனா உருவாக்கியதாகவும், சீன ஆய்வகத்திலிருந்து இந்த வைரஸ் பரவத் தொடங்கியதாகவும், கரோனா வைரஸ் குறித்துப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

 

எனவே கரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய, உலக சுகாதார நிறுவனம், அறிவியல் நிபுணர்கள் குழுவை அமைத்தது. இதனையடுத்து அந்த அறிவியல் நிபுணர் குழு உறுப்பினர்கள் சீனாவிற்குப் பயணத்தை தொடங்கிய நிலையில், தங்கள் நாட்டிற்குள் அந்த அறிவியல் நிபுணர்குழு வருவதற்கு சீனா அனுமதி தரவில்லை. இதற்கு அதிருப்தி தெரிவித்த உலக சுகாதார நிறுவனம், இந்தப் பணி ஐ.நா. சுகாதார நிறுவனத்திற்கு முன்னுரிமை என்பதைத் சீனாவிற்குத் தெளிவுபடுத்தியதாகவும், நிபுணர் குழுவுக்கு சீனாவில் ஆய்வு செய்யும் அனுமதியை வழங்குவதற்கான உள்நடைமுறைகளை வேகப்படுத்துவதாக அந்த நாடு உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில், கரோனா தொற்று உருவான விதம் குறித்து ஆய்வு நடத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவுக்கு சீனா அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக சீன சுகாதாரத்துறை ஆணையம், நிபுணர்குழு வரும் 14 ஆம் தேதி சீனாவிற்கு வருவார்கள் என அறிவித்துள்ளது.  

 

சார்ந்த செய்திகள்