46 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பறவையின் உடல் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சைபீரியாவின் வடகிழக்கு பகுதியில் வேட்டைக்கு சென்ற சிலர் பனியில் மறைந்து இறந்து கிடந்த பறைவை ஒன்றின் சடலத்தை பார்த்துள்ளனர். இதற்கு முன்பு இந்த மாதிரியான பறவையை அவர்கள் பார்த்ததில்லை என்பதால் அதனை அருங்காட்சிய அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர். அவர்கள் அந்த பறவையை எந்த காலகட்டத்தில் வாழ்ந்தது என்பதை கண்டறிவதற்காக கார்பன் டேட் சோதனை செய்தனர்.

அதில் பல ஆச்சரியமான முடிவுகள் தெரியவந்தது. அந்த பறவைகள் பனியுகம் என்று அழைக்கப்பட்ட காலகட்டத்தில் வாழ்ந்து வந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பனியுகம் என்பது உலகம் முழுவதும் பனியால் சுழப்பட்டிருந்த காலகட்டத்தை குறிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் அந்த பறவை 46 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினங்களில் ஒன்று என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள். இதன் மூலம் மேலும் பனியுக காலத்தில் வாழ்ந்த உயிரினங்களை கண்டறியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.