முதல் பிரசவம் நடந்து அடுத்த 26 நாட்களில் ஒரு பெண்ணுக்கு மற்றுமொரு இரட்டை குழந்தைகள் பிறந்த அதிசய சம்பவம் வங்கதேசத்தில் நடந்துள்ளது.
வங்கதேசத்தில் வசித்து வரும் சுமன் பிஸ்வாஸ், ஆரிபா சுல்தானா (வயது 20) தம்பதிக்கு குல்னா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாத இறுதியில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து பிரசவம் முடிந்து அந்த பெண் மீண்டும் வீட்டுக்கு சென்ற நிலையில் 26 நாட்கள் கழித்து திடீரென வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அந்த பெண்ணிற்கு மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். அப்போது அந்த பெண்ணிற்கு இரண்டாவது கர்ப்பப்பை இருந்ததும், அதில் இரட்டை குழந்தைகள் இருந்ததும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து உடனடியாக அந்த பெண்ணுக்கு அறுவைசிகிச்சை நடத்தப்பட்டு இரண்டு குழந்தைகளும் வெளியே எடுக்கப்பட்டன. சுல்தானாவிற்கு முதல் பிரசவம் நடந்து 26 நாட்களில் மேலும் இரண்டு குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் உலகம் முழுவதும் ஒரு அதிசயமாகவே பார்க்கப்படுகிறது.