Published on 04/03/2022 | Edited on 04/03/2022

ரஷ்யா- உக்ரைன் நாடுகளிடையே கடும் போர் நடந்து வரும் நிலையில், ராணுவ உடை மீது குழந்தைத் தூங்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
உக்ரைன் ராணுவ முகாமில் தந்தையின் ராணுவ உடை மீது எந்தவித கவலையுமின்றி அமைதியாக தூங்கும் குழந்தையின் புகைப்படம் மனதை உலுக்குவதாக உள்ளது. போய் வருகிறேன் எனதருமை மகனே, உயிர் பிழைத்தால் மீண்டும் உன்னை சந்திக்கிறேன் என குழந்தையின் ராணுவ வீரர் தந்தை கூறுவது போல, இந்த புகைப்படத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது.
போருக்கு இடையே காதலர்கள் திருமணம் செய்வது, தனது குடும்பத்தைப் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பும் குடும்ப தலைவர்கள் உள்ளிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இந்த புகைப்படம் காண்போரைக் கண்கலங்க செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.