ஆஸ்திரேலியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் இங்கிலாந்தில் சாப்பிட்ட பீருக்கு 50,000 பவுண்டுகள் பில் கட்டியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த பிரபல செய்தியாளர் பீட்டர் லலோர், ஆஷஸ் கிரி்க்கெட் தொடர் குறித்த செய்திகளை பதிவு செய்ய இங்கிலாந்து சென்றுள்ளார். அப்போது மான்செஸ்டர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு சென்று பீர் அருந்தியுள்ளார் பீட்டர். பீரை அருந்தி முடித்ததும் அவருக்கு அதற்கான பில் வழங்கப்பட்டுள்ளது. அதில் அவர் அருந்திய பீரின் விலை இந்திய மதிப்பில் 48 லட்ச ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்தது. தனது டெபிட் கார்ட் மூலம் பணத்தை கட்டிய பிறகு பில்லை பார்த்த அவருக்கு பேரதிர்ச்சியாக இருந்துள்ளது.
பின்னர் இதுகுறித்து கிளப் நிர்வாகத்திடம் அவர் கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தவறுதலாக ராபர்ட் பீட்டரிடம் பணம் பெறப்பட்டுள்ளதை ஓட்டல் நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் இது தொடர்பாக கிளப் நிர்வாகம் மன்னிப்பு கேட்டதோடு, அவரது பணமும் விரைவில் திரும்ப கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. பேருக்கு 48 லட்ச ரூபாய் பில் போட்ட இந்த நிகழ்வு தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.