Skip to main content

ஷேக் ஹசீனாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி; வங்கதேச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Published on 07/01/2025 | Edited on 07/01/2025
Arrest warrant for former Bangladesh Prime Minister Sheikh Hasina

வங்கதேசத்தில் 1971ஆம் ஆண்டில் நடந்த விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத ஒதுக்கீடு வழங்க வங்கதேச அரசு முடிவு செய்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தால், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, நாட்டை விட்டே வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் , வங்கதேச நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராகப் பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஷேக் ஹசீனாவுற்கு வங்கதேச குற்றவியல் நீதிமன்றம் பிவாரண்ட் பிறப்பித்து கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி ஹசீனாவை ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அதே சமயம் வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையில் அவரது அதரவாளர்கள் பலரும் கொல்லப்பட்டனர். இதற்கிடையே அவரை வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பக்கூடாது எனத் தொடர்ந்து இந்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தும் வருகின்றனர்.

இந்த நிலையில், ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நீதிமன்றம் மீண்டும் கைது உத்தரவிடப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேசத்தில் போராட்டம் நடந்த போது ஏராளாமானோர் மர்மமான முறையில் காணாமல் போனதாக ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கை வங்கதேச நீதிமன்றம், வரும் பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் ஷேக் ஹசீனா, முன்னாள் காவல்துறை தலைவர்கள், ராணுவ தளபதிகள் உள்ளிட்ட 11 பேரை கைது செய்ய வேண்டுமென ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்