Skip to main content

தனது குடும்பத்தினர் அனைவரையும் சுட்டு கொன்ற 14 வயது சிறுவன்...

Published on 04/09/2019 | Edited on 04/09/2019

அமெரிக்காவின் அலபாமா மாகாணம் எல்க்மொண்டில் என்ற இடத்தில் 14 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டத்தில் அவனது குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

alabama shootout

 

 

அலபாமாவை சேர்ந்த அந்த சிறுவன் போலீசை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, தனது வீட்டில் யாரோ துப்பாக்கியால் சுடுவதாகவும், முதல்தளத்திலிருந்து சத்தம் வருவதாகவும், தான் கீழ்த்தளத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளான். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர்.

ஆனால் போலீஸார் அங்கு சென்ற போது 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர். மேலும் 2 பேர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அந்த சிறுவனின் தந்தை ஜான் சிஸ்க் (38), தாய் மேரி சிஸ்க்(35), அவரது 6 வயது சகோதரன், 5 வயது வளர்ப்பு சகோதரி மற்றும் பிறந்து ஆறு மாதமே ஆன அவரது 6 மாத தம்பி ஆகிய அனைவரும் இறந்து கிடந்துள்ளார்.

சிறுவனிடம் கேட்ட போது முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். இதனையடுத்து சிறிது நேர விசாரணையில், தனது குடும்பத்தை அவனே கொன்றதை ஒப்புக்கொண்டான். மேலும் குடும்பத்தினரை சுட்டுவிட்டு கைத்துப்பாக்கியை சிறுவன் அருகில் தூக்கி எறிந்ததாகவும் அதை தேடும் பணியில் சிறுவன் தற்போது உதவி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த சிறுவன் எதற்காக தனது குடும்பத்தினரை கொன்றான் என்பது குறித்து விசாரணை நடந்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்